அருப்புக்கோட்டை ஒன்றிய தலைவர் பதவியையும் கைப்பற்றியது தி.மு.க.,


அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ஒன்றிய தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பாக போட்டியிட்ட யோகவாசுதேவன் வெற்றி பெற்றதாக அறிவித்ததால், ஆத்திரமுற்ற அ.தி.மு.க., வினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் அ.தி.மு.க., 8 , தி.மு.க., 4 , சுயேச்சைகள் 2 , ம.தி.மு.க., வில் ஒன்று என கவுன்சிலர்கள் உள்ளனர். நேற்று நடந்த ஒன்றிய தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வில் சங்கரலிங்கம், தி.மு.க.,வில் யோகவாசுதேவன், போட்டியிட்டனர். ம.தி.மு.க.,சீனிவாசன் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. 14 கவுன்சிலர்கள் மட்டும் ஓட்டளித்தனர். அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர் இருவரும் தலா 7 ஓட்டுகள் பெற்றனர்.

இதனால் அருமை நாயகம் வரகுணராஜ் ஆர்.டி.ஒ.,மற்றும் தேர்தல்அலுவலர் பரமசிவம் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. தி.மு.க., வேட்பாளர் யோகவாசுதேவன் வெற்றி பெற்றார். இதை கண்டித்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ,அதிகாரிகள் முறைகேடு செய்து விட்டதாக புகார் கூறினர். இந்த தகவல் வெளியில் இருந்த சங்கரலிங்கம் ஆதரவாளர்களுக்கு தெரிந்ததும், மீண்டும் தேர்தல் நடத்த கோரி ,பாலையம்பட்டி ரோட்டில் ரோடு மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் அங்கு நேரம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சாமிநாதன் ஏ.எஸ்.பி. , முருகேசன் டி.எஸ்.பி. ,மற்றும் அதிகாரிகள் சமாதானம் செய்தும் மறியல் செய்தவர்கள் கலையவில்லை. மதியம் 1.30 துவங்கிய மறியல் இரவு எட்டு மணிவரை நீடித்தது. அவர்களிடம் ராமன் டி.ஆர்.ஒ., தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

0 comments:

Post a Comment