துணைத்தலைவர் பதவியை கைப்பற்றியது தி.மு.க


பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2011,22:01 IST
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வில் மெஜாரிட்டி இருந்தும், கோஷ்டிபூசலால் தி.மு.க.,வசமானதால்,அத்திரமுற்ற அ.தி.மு.க.,வினர், ரோடுமறியலில் ஈடுப்பட்டனர்.மறியலும் இரவு வரை நீடித்ததால் கிராமமக்கள் பரிதவித்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி தலைவர் பதவியை தி.மு.க., கைப்பற்றி உள்ளது. இங்கு வெற்றி பெற்ற கவுன்சிலர்களில் அ.தி.மு.க., 20 , தி.மு.க., 12 , காங்., மற்றும் ம.தி.மு.க., தலா ஒரு இடம், சுயே., 2 இடங்களை பிடித்தது. துணைத் தலைவருக்கான தேர்தலில் ,அ.தி.மு.க., சார்பாக கண்ணன் மற்றும் தமிழ்மணி சீட் கேட்டிருந்தனர். கட்சி தலைமை கண்ணனை வேட்பாளராக அறிவித்தது. தி.மு.க., சார்பாக தமிழ்காந்தன் அறிவிக்கப்பட்டார்.

இதை தொடர்ந்து நேற்று நடந்த தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் தமிழ்காந்தன் 20 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளர் கண்ணன் 17 ஓட்டுகளே பெற்றார். அ.தி.மு.க.,வில் மெஜாரிட்டி இருந்தும், கோஷ்டிபூசலால் துணைத் தலைவர் பதவியும் தி.மு.க.,வசமானது. கண்ணனை வேட்பாளராக அறிவித்ததில் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க., வை சேர்ந்த ஒருசில கவுன்சிலர்கள், தி.மு.க., விற்கு ஓட்டு போட்டதால் ,துணைத்தலைவர் பதவியையும் தி.மு.க., கைப்பற்ற முடிந்தது . இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ,நகராட்சி கமிஷனரை கண்டித்தும், மீண்டும் தேர்தல் நடத்த கோரி ,புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில் ரோடு மறியிலில் ஈடுப்பட்டனர்.பிற்பகல் 2 மணிக்கு துவங்கிய மறியல் இரவு 7.30 மணிவரை முடியாமல் நீடித்தது. மாலையில் பள்ளி முடிந்து வந்த மாணவர்கள், பஸ் இல்லாமல் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். கிராம மக்களும் அவதிப்பட்டனர்.பின்னர் இவர்கள் நடந்தே ஊர்களுக்கு சென்றனர். வெளியூருக்கு எந்த பஸ்சும் செல்லாததால் அருப்புக்கோட்டை ஸ்தம்பித்தது.இதை தொடர்ந்து , ராமன் டி.ஆர்.ஒ., பேச்சுவார்த்தை நடத்தினார்.

0 comments:

Post a Comment